Main Menu

புலிகளில் இருந்து விலகியபோதே கருணா மீதிருந்த குற்றச் சாட்டுக்கள் சட்டபூர்வமாக மன்னிக்கப்பட்டது – எஸ்.பி.

உள்நாட்டு போரின்போது இலங்கை அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து விலகியபோதே கருணா அம்மான் மீதிருந்த குற்றச்சாட்டுக்கள் சட்டபூர்வமாக மன்னிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

போரின்போது 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாக கருணா தெரிவித்ததையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என தென்பகுதியில் அழுத்தங்கள் அதிகரித்துவருகின்றன.

இந்நிலையில் குறித்த கருத்து தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை கிழக்கு தமிழ் மக்களின் நலன்களைப் புறக்கணித்து வருவதாகவும், அந்த நேரத்தில் வன்முறையை கைவிடுவதாகக் கூறி ஜூலை 2004 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார்.

இந்நிலையில் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பான விசாரணைக்காக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலைனார் என பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

கருணாவின் கூற்று தொடர்பாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.ஐ.டி. க்கு இன்று உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...