Main Menu

ஸ்பெயினில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள்

ஸ்பெயின் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பிராந்திய சுகாதார அதிகாரிகள் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி ஸ்பெயினில் 716,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தலைநகர் மட்ரிட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்த உறுதியுடன் செயற்பட வேண்டிய நேரம் இது என சுகாதார அமைச்சர் சால்வடார் இல்லா தெரிவித்துள்ளார்.

பகிரவும்...