Main Menu

பிரான்ஸ் Travail- சைபர் தாக்குதல் – 43 மில்லியன் பேரின் தகவல்கள் திருட்டு

பிரான்ஸ் திறவாய் (France Travail – முன்னாள் Pole Emploi) நிறுவனம் மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்திருந்த தகவல்கள் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் வங்கி தகவல்களோ, கடவுச் சொற்களோ திருடப்படவில்லை எனவும், அவை பாதுகாப்பாக இருப்பதால் அச்சமடையத்தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர், பிறந்த ஆண்டு திகதி, இலக்கம், பிரான்ஸ் திறவாய் பதிவு இலக்கம், மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம் மற்றும் வீட்டு முகவரி (nom et prénom, numéro de sécurité sociale, date de naissance, identifiant France Travail, adresses mail et postales மற்றும் numéros de téléphone) ஆகிய தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மொத்தமாக 43 மில்லியன் பேரின் தகவல்கள் இதுபோல் திருடப்பட்டுள்ளன.

பகிரவும்...