Main Menu

ஸ்பெயினின் தலைநகரில் மீண்டும் கொவிட்-19 கட்டுப்பாடுகள்!

ஸ்பெயினின் தலைநகர் மட்ரிட்டின் பகுதிகள், கொவிட்-19 தொற்று பரவலின் உயர்வைக் கட்டுப்படுத்த முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன.

திங்கட்கிழமை முதல், மட்ரிட் பிராந்தியத்தில் 850,000க்கும் அதிகமான மக்கள், பயணம் மற்றும் குழுக்களின் அளவுகளில் வரம்புகளை எதிர்கொள்வார்கள்.

ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றுகள் ஸ்பெயினில் உள்ளன. மேலும் மட்ரிட் மீண்டும் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியாக இனங்காணப்பட்டுள்ளது.

பல வடக்கு அரைக்கோள நாடுகள், இப்போது குளிர்காலம் நெருங்கும்போது தொற்றுநோயின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

ஸ்பெயினில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 659,334பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,495பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...