Main Menu

வேல்ஸில் கண்டறியப்படாத ஆயிரக் கணக்கான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எச்சரிக்கை!

வேல்ஸில் இதுவரை அடையாளம் காணப்படாத சுமார் 3,000 பெண்கள் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 30,000 பேர் மேமோகிராம்களைத் தவறவிட்டதாக டெனோவஸ் புற்றுநோய் பராமரிப்பு மதிப்பிடுகிறது.

கொரோனா தொற்று காரணமாக சுகாதார சேவையினால் மேற்கொள்ளப்படும் மார்பக புற்றுநோய் பரிசோத மார்ச் மாதத்தில் வேல்ஸால் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ஓகஸ்ட் மாதத்தில் இந்த சேவை மீண்டும் தொடங்கியது.

ஆனால் இந்த நேரத்தில் 30,000 பேர் ஸ்கிரீனிங் சந்திப்பைத் தவறவிட்டதாக டெனோவஸ் புற்றுநோய் பராமரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜூடி ரைஸ் கூறினார்.

உண்மையில் வேல்ஸில் 3,000 பெண்கள் கண்டறியப்படாத மார்பக புற்றுநோயுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே இதன் பொருள் என்றும் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...