Main Menu

வெள்ளம் மனிதாபிமான அணுகலை பாதிக்கிறது – ஐ.நா

தெற்கு சூடானில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அணுகுவது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் முயற்சிக்கு சவாலாக மாறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மே மாதம் முதல் நாடு முழுவதும் 8 இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் கூறியுள்ளது.

நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள யூனிட்டி மற்றும் அப்பர் நைல் ஆகிய இரண்டு எண்ணெய் உற்பத்தி மாநிலங்களில் உள்ள மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம், பென்டியூவிற்கு விஜயம் செய்த தெற்கு சூடானில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் பணியின் தலைவர் நிக்கோலஸ் ஹேசோம், நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்தார்.

வெள்ள நீர் தொடர்ந்தும் இருக்கும் அதேவேளை நூறாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதாரப் பற்றாக்குறை, கல்வி மற்றும் நீரினால் பரவும் நோய்களின் ஆபத்து ஆகியவற்றின் அடிப்படையில் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

பகிரவும்...