Main Menu

வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் பொறுப்பை தமிழக அரசு ஏற்றது

வெளிமாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளதால்  தன்னிச்சையாகவோ, நடைபயணமாகவோ பிறவாகனங்களின் மூலமாகவோ, செல்லவேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 6ஆம் திகதி தொடங்கி 15ஆம் திகதி வரை, 55 ஆயிரத்து 473 வெளிமாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் சுமார் 10,000 வெளிமாநிலதொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாகவோ பிறவாகனங்களின் மூலமாகவோ, செல்லவேண்டாம். அதுவரை, வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும்”  என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிரவும்...