Main Menu

வீழ்ச்சி அடைந்துள்ள மசகு எண்ணைய் விலையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தை வெற்றி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மசகு எண்ணைய் விலையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன.

வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் மசகு எண்ணெய் உற்பத்தியில் தினசரி சுமார் 97 இலட்சம் பெரல்களை குறைக்க ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் இதர ஓபெக் நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.

வீடியோ கான்பரன்ஸ் வழியாக 3 நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் ஜி- 20 நாடுகளின் எரிசக்தி அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

எண்ணெய் உற்பத்தியை குறைக்க முன் வந்ததற்காக ரஷ்ய ஜனாதிபதி புடினிற்கும், சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

உற்பத்தி மீதான கட்டுப்பாடு வருவதை அடுத்து மசகு எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...