Main Menu

மீண்டு வருகிறது இத்தாலி: 3 வாரங்கள் கடந்து மரணங்கள் வெகுவாகக் குறைந்தன!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் நேற்று 431 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கையாகப் இது பதிவாகியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்குப் பரவிபெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் இதுவவைர 18 இலட்சத்து 53 ஆயிரத்து 155 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 247 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,  கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில வாரங்களாக இத்தாலியில் தீவிரமடைந்து தினமும் சராசரியாக 700 முதல் 900 வரை உயிரிழப்புகளை அந்நாடு சந்தித்தது. மேலும், கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவந்தது.

இந்நிலையில், இத்தாலியில் 24 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

தற்போதைய நிலைவரப்படி, அந்நாட்டில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 363 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 899 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், நேற்று புதிதாக 4 ஆயிரத்து 92 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் 34 ஆயிரத்து 211 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் கடந்த நாட்களில் காணப்பட்ட தீவிரப் போக்கு குறைந்து வருகின்றமை அந்நாட்டு மக்களிடத்தில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்...