Main Menu

இரா­ணு­வம் உடன் வெளி­யேற வேண்­டும் -மக்­க­ளின் கோரிக்­கையை அர­சு நிறை­வேற்ற வேண்­டும்

எமது சொந்த நிலத்தை இரா­ணு­வம் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருக்­கக் கூடாது. அந்த நிலங்­க­ளி­லி ­ருந்து இரா­ணு­வம் உடன் வெளி­யேற வேண்­டும். எமது நிலம் எமக்கே வேண்­டும். இது வடக்கு – கிழக்கு தமிழ் மக்­க­ளின் பிர­தான கோரிக்கை. இந்­தக் கோரிக்­கையை அர­சும் இரா­ணு­வ­மும் உதா­சீ­னம் செய்ய முடி­யாது. எனவே, வீராப்பு வச­னங்­களை நிறுத்­தி­விட்டு எமது மக்­க­ளின் கோரிக்­கையை அர­சும் இரா­ணு­வ­மும் நிறை­வேற்ற வேண்­டும்.”

இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

வடக்­கில் முழு­மை­யான படை விலக்­கல் சாத்­தி­ய­மில்லை என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவன் விஜே­வர்த்­தன கொழும்பு ஆங்­கில ஊட­கம் ஒன்­றி­டம் தெரி­வித்­தி­ருந்­தார். “வடக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து இருந்து படை­களை முழு­மை­யாக விலக்­கும் கோரிக்­கையை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது. அரசு கூறி­னா­லும் இதை நாம் செய்­யவே மாட்­டோம்” இரா­ணு­வப் பேச்­சா­ளர் பிரி­கே­டி­யர் சுமித் அத்­த­பத்து தெரி­வித்­தி­ருந்­தார். அது தொடர்­பா­கக் கருத்­துத் தெரி­வித்­த­போதே இரா.சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளார்.
அவர் தெரி­வித்­த­தா­வது-

எமது மக்­களை அவர்­க­ளின் சொந்த நிலத்­தில்­தான் வாழ வேண்­டும். படை­யி­ன­ரின் வச­திக்­காக அவர்­களை வெளி­யி­டங்­க­ளுக்கு மாற்­றவே முடி­யாது. இதற்கு ஒரு­போ­தும் எமது மக்­கள் இட­ம­ளிக்­க­மாட்­டார்­கள்

தமது நிலங்­க­ளில் இரா­ணு­வத்­தி­னர் நிலை­கொண்­டி­ருப்­ப­தால் சொல்­ல­ணாத் துய­ரங்­களை எமது மக்­கள் அனு­ப­வித்து வரு­கின்­றார்­கள். யாழ்ப்­பா­ணத்­தில் வலி­கா­மம் வடக்­கில் மக்­க­ளின் பல காணி­கள் இன்­ன­மும் விடு­விக்­கப்­ப­டா­மல் உள்­ளன. அதே­வேளை, முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமது நிலங்­களை விடு­விக்­கக் கோரி கேப்­பாப்­பி­லவு மக்­கள் நீண்­ட­கா­ல­மாக ஜன­நா­யக வழி­யில் போராடி வரு­கின்­ற­னர். அதே­வேளை, வடக்கு – கிழக்­கில் சில பகு­தி­கள் இன்­ன­மும் விடு­விக்­கப்­ப­டா­மல் இரா­ணு­வத்­தின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்­ளன. எனவே, மக்­க­ளின் நிலங்­க­ளி­லி­ருந்து இரா­ணு­வம் உடன் வெளி­யேற வேண்­டும். மக்­கள் வசிக்­கும் இடங்­க­ளில் இரா­ணுவ முகாம்­கள் தேவையே இல்லை.- என்­றார்.

பகிரவும்...