Main Menu

வாழ்நாளில் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்க வேண்டாம் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

சக மனிதனுக்கு கவலையும் கஷ்டத்தையும் கொடுக்குமாறு எந்தவொரு ஆகமத்திலும் கூறப்படவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களிடம் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிடுமாறும் அடிப்படை வாதத்துக்கு இனி வாழ்நாளில் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் நள்ளிரவு பேராயர் தலைமையில் இடம்பெற்ற கிருஸ்மஸ் விஷேட ஆராதனைகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் மற்றும் மட்டக்களப்பு புனித செபஸ்தியார் தேவாலயம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களிலும் விஷேட ஆராதனைகள் பாதுகாப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...