Main Menu

பொதுஜன வாக்கெடுப்பிற்காக பிரார்த்திக்கிறோம் – உறவுகள்

கிறிஸ்மஸ் தினமான இன்று காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டமொன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1040 நாட்களாக போராடிவரும் காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களாலே இப்போராட்டம் இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

காணாமலாக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்க தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஜ.நா. உதவியுடன் பொதுஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு காலம் கனிந்துவர பிராத்த்திப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது “இறைதூதர் யேசுவை போலவே நாம் இன்று சிலுவை பாரம் சுமந்து நிற்கிறோம். இரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் ஒரு மீட்பர் கிடைக்க மாட்டாரா? என்று இப்போதும் ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கும் இனம் நாங்கள். எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் தாய்மார்களும் தந்தையர்களும் தங்களது காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளையும் அன்புக்குரியவர்களையும் கண்டுபிடிக்க தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ள ஜ.நா. உதவியுடன் பொதுசன வாக்கெடுப்பொன்றை நடாத்துவதற்கு காலம் கனிந்துவர இந்த கிறிஸ்மஸ் தினத்தில் பிரார்த்திக்கிறோம்“ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...