Main Menu

வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாமையே நாங்கள் வீதிகளில் இறங்கக் காரணம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் விவசாயிகள் வீதிகளில் அமர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல விவசாயிகள் வீதிகளில் கூடாரம் அமைத்து தொடர்ந்தும் போராடி வருவதால் பலரது உடல்நிலை மோசமடையும் நிலையில் உள்ளது.

ஏற்கனவே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், இன்று மத்திய அரசுடன் 6 ஆம் கட்டப்பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.

இந்நிலையில், நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததாலேயே விவசாயிகள் வீதிகளில் அமர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாரதிய கிஸான் யூனியன் அமைப்பை சேர்ந்த ராகேஷ் டிகெய்ட் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ‘வலுவான எதிர்க்கட்சி நாட்டிற்கு அவசியமான ஒன்று. அவர்களுக்கு அரசு அச்சப்பட வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளால் அரசு அச்சம் கொள்வதில்லை. இதனால் தான் விவசாயிகள் வீதிக்கு வந்துள்ளனர். எதிர்க்கட்சி வீதிகளில் இறங்கி தொடர்ந்து போராட வேண்டும். வேளாண் சட்டத்திற்கு எதிராக வீதிகளில் மேடைகளை அமைக்க வேண்டும்’ என்று கூறினார்.

பகிரவும்...