Main Menu

கொரோனா தடுப்பூசியைச் செலுத்த தயாராகும் இந்தியா – ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்!

குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு தயாராகிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தடுப்பூசியை குறிப்பிட்ட குளிர்பதன நிலையில் சேமிப்பது, தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அதை கொண்டு வந்து விநியோகிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி ஒத்திகை தொடர்பாக 4 மாநிலங்களும் திருப்தி தெரிவித்தன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதற்காக பதிவு செய்துகொள்ள ‘கோ-வின்’ என்ற செயலி தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதில் இதுவரை 1.5 லட்சம் சுகாதார பணியாளர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து பொது மக்களுக்கு தடுப்பூசி விரைவில் போடப்பட உள்ளது. தடுப்பூசி போடுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. தடுப்பூசி போடுவதற்கான முறையான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...