Main Menu

வலுப்பெறும் ஹொங்கொங் போராட்டம்: இதுவரை 6000 பேர் கைது

ஹொங்கொங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000யை தாண்டியுள்ளது.

போராட்டம் ஆறு மாதங்களை எட்டியுள்ளதை நினைவுகூறும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பிரமாண்ட பேரணியொன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது, கைத்துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களை வைத்திருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமைதியான முறையில் நடைபெற்ற அந்த போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபடுவதற்காக அவர்கள் அந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இதுதவிர, பெட்ரோல் குண்டுகளை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் 12 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இத்துடன், போராட்டம் தொடர்பாக 6,022 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், போராட்டக்காரர்களை நோக்கி 16,000 கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொங்கொங்கில் ஜனநாயக ஆட்சி முறை கோரியும், சீனாவின் அடக்கு முறைக்கு எதிராகவும் மக்கள் தன்னெழுச்சியாக தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...