Main Menu

யேமனில் நிலை கொண்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைத்தது சூடான்!

யேமனில் நிலைக்கொண்டுள்ள தங்கள் நாட்டுப் படைகளின் எண்ணிக்கையை சூடான் வெகுவாக குறைந்துள்ளது.

இதன்படி, யேமனில் உள்ள தனது துருப்புகளின் எண்ணிக்கையை 15,000இல் இருந்து 5,000ஆகக் குறைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

யேமன் போருக்கு இராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என சூடான் பிரதமர் தெரிவித்திருந்தன் பின்னணியில், இந்த படை குறைப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், சௌதி அரேபியா, யேமன் போரை கட்டம் கட்டமாக முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றதனால், அங்கு போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. ஆகவே, யேமனில் பிற நாட்டுப் படைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது.

இதன்காரணமாகவே படைகளின் எண்ணிக்கையை சூடான் குறைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

தென்மேற்கு ஆசிய நாடான யேமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயற்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு யேமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், யேமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். யேமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...