Main Menu

லெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்!

உலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச சமூகம் உறுதியளித்த மில்லியன் கணக்கான டொலர்கள் உதவித்தொகையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்த சர்வதேச மாநாட்டில் இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.

இந்த நிவாரணம் நாட்டின் அரசியல்வாதிகளிடம் கையளிக்கப்படாமல், நேரடியாக லெபனான் மக்களிடமும் நம்பகமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும் செல்லும் என மக்ரோன் தெரிவித்தார்.

துறைமுக வெடிப்பு பெய்ரூட்டின் பெரும் பகுதிகளை அழித்தது. இதில் 200பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6,500பேர் காயமடைந்தனர்.

இன்றுவரை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் கலாச்சார மற்றும் பாரம்பரிய தளங்களை பாதுகாத்தல் போன்ற உடனடி தேவைகளுக்காக 338 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக மக்ரோன் கூறினார்.

இந்த வெடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை ஆழப்படுத்தியது. லெபனான் பவுண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக அதன் மதிப்பில் 80 சதவீதத்தை இழந்துவிட்டது.

நாட்டின் பொருளாதாரம் 2019இல் 6.7 சதவீதமாக சுருங்கியது மற்றும் 2020ஆம் ஆண்டில் 19.2 சதவீதத்தை சுருக்கியதாக கணிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...