Main Menu

கொவிட்-19 தடுப்பூசியின் முதல் தொகுதி பிரித்தானியாவுக்கு வந்தடைந்தது!

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் தொகுதி பிரித்தானியாவுக்கு வந்துள்ளது.

இது வெளியிடப்படாத இடத்தித்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்போது பிரித்தானியாவைச் சுற்றியுள்ள மருத்துவமனை தடுப்பூசி மையங்களுக்கு விநியோகிக்கப்படும்.

இங்கிலாந்து 40 மில்லியன் அளவுகளை முன்பதிவு செய்துள்ளது. இது 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட போதுமானது.

இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி, தடுப்பூசிகளின் முதல் அலை 99 சதவீதம் வரை கொவிட்-19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறப்பதைத் தடுக்கலாம் என கூறினார்.

பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம், முதல் முன்னுரிமை பட்டியலில் உள்ள அனைவரும் தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் அது சாத்தியமாகும். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், தடுப்பூசியை விரைவாகவும் முடிந்தவரை அதிக அளவிலும் விநியோகிப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.

ஆனால் பட்டியலில் சில நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று அவர் ஒப்புக் கொண்டார்.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசிகள் பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்டு யூரோ சுரங்க வழியாக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளன.

பகிரவும்...