Main Menu

லண்டன் பிரிட்ஜ் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் கவலை

லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உட்பட பல அரசியல் தலைவர்களும் தமது கவலையைத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தொடர்ந்தும் தகவல்களைப் பெற்று வருவகிறேன். உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார் மற்றும் அனைத்து அவசர சேவைப் பிரிவினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவசரகால சேவைகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

லண்டன் பிரிட்ஜில் இருந்து கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. சம்பவத்தில் சிக்கியவர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார் மற்றும் அவசர சேவைப் பிரிவினருக்கு நன்றி என தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

லண்டன் பிரிட்ஜில் இடம்பெற்ற சம்பவத்தால் மிகவும் கவலை அடைந்துள்ளேன். எனது எண்ணங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் பொலிஸாரின் விரைவான நடவடிக்கைக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், எல்லோரும் அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் தெரிவித்துள்ளார்.

நான் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன், தொடர்ந்தும் தகவல்களைப் பெற்றுவருகிறேன். இந்தத் தாக்குதலில் மக்கள் காயமடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என் இதயம் அவர்களிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும், பாதிக்கப்பட்ட அனைவரிடமும் செல்கிறது என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...