Main Menu

நாய் உரிமையாளர்-களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டு வருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்

ரெட்கார் கடற்கரையில் தனது ஹஸ்கி நாய் மற்றும் மகள் மீது புல்லி ரக நாய்கள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபத்தான நாய் இனங்களை வளர்ப்பவர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் எதிராக இங்கிலாந்து அரசாங்கம் கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தாய்  கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நாய் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் இதன் வீதம் மிக அதிகமாக உள்ளதாகவும் புதிய தரவுகள் வெளியாகியுள்ள பின்னணியில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் தனது செல்லப் பிராணியான ஹஸ்கி நாயுடன் ரெட்கார் (Redcar) கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போதே இந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்களைப் பிரிக்க முயன்ற போது, குறித்த தாயின் மகளின் கையிலும் நாய் பலமாகக் கடித்துள்ளது. அத்துடன், இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற பொதுமக்களில் சிலரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கொடூரச் சம்பவத்திற்குப் பின்னர் , உரிய தகுதியுடையவர்கள் மட்டுமே ஆபத்தான நாய் இனங்களை வளர்ப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தாய்  வலியுறுத்தியுள்ளார்.