Main Menu

உடல் முழுக்க கோலியின் உருவங்களை பச்சை குத்திய ரசிகர்..!

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் அதி தீவிர ரசிகர் ஒருவர், தனது உடல் முழுக்க அவரது உருவத்தை விதவிதமாக பச்சை குத்தி கவனம் ஈர்த்துள்ளார்.

கோலியின் பேட்டிங்கால் ஈர்க்கப்பட்ட பிந்து பெகரா (Pintu Behera) என்ற நபர், அவரது உருவத்தை பச்சை குத்திக்கொள்ளவேண்டும் என 2016ஆம் ஆண்டு முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்துவந்த அவர், சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து 16 உருவங்களை பச்சை குத்தியுள்ளார்.

அந்த வகையில், கோலியின் உருவம், பெயர், ஜெர்சி எண் மற்றும் பிசிசிஐ லோகோ என ஏராளமான உருவங்களை தனது உடல் முழுக்க பச்சை குத்தியுள்ளார்.

கோலியின் மீது தான் கொண்டுள்ள மரியாதை வெளிப்படுத்தும் விதமாகவே பச்சை குத்தியதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...