Main Menu

ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பம்!

ரஷ்யா உருவாக்கியுள்ள ‘ஸ்புட்னிக்-வி’ என்று அழைக்கப்படுகிற தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பமாகியுள்ளது.

இந்த மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நேற்று (புதன்கிழழமை) ஆரம்பமானதாக சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ அறிவித்துள்ளார்.

இந்த மருத்துவ பரிசோதனையில் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் நீண்ட கால பாதுகாப்பு மற்றும் செயற்திறன் தெரிய வரும்.

இந்த தடுப்பூசியை 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படும் என மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டச் சோதனை முடிவுகள் பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ‘த லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அவை பல்வேறு கட்டங்களாக மனிதர்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. தற்போது இந்த மருந்தின் இறுதிக்கட்ட சோதனை வெற்றிபெற்றால், உலகிலேயே கொவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடித்த முதல்நாடு என்ற பெருமையை ரஷ்யா பெறும்.

பகிரவும்...