Main Menu

ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து நீக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் நேற்றைய தினம், காணொளி மூலம் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, உக்ரைனில் ரஷ்ய படைகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்புச் சபைக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

இதன்போது, ரஷ்ய படையினால், உக்ரைனியர்கள் கொல்லப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்ற நிலையில், ரஷ்யா பொறுப்புக் கூரலுக்கு உள்ளாக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், ரஷ்யாவில் அனைத்து புதிய முதலீடுகளையும், அமெரிக்க தடை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-7 நாடுகள் உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்துடன், இணைந்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுக்க உள்ளதாக, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பகிரவும்...