Main Menu

ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள் இன்னமும் ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படும்: ஜோசப் பொரெல்

ரஷ்யாவிற்கு எதிரான மேலும் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் வார இறுதிக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

முகாமின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், பிரஸ்ஸல்ஸில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்தினை வெளியிட்டார்.

இந்த நடவடிக்கைகள் நான்கு ரஷ்ய வங்கிகளையும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியையும் குறிவைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இது அடுத்த மணிநேரங்களில் அல்லது குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான முகாமின் சமீபத்திய பொருளாதாரத் தடைகள் குறித்து விவாதிக்க வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் சந்தித்த பின்னர் இந்த செய்தி வந்துள்ளது.

அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஏகோபித்த ஆதரவு தேவைப்படும் 10ஆவது தடைகள், கனரக வாகனங்கள் உட்பட ரப்பர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை குறிவைக்கும்.

பகிரவும்...