Main Menu

ரஷ்யாவின் எதிர்க் கட்சித் தலைவரின் உடலில் நோவிச்சோக்: சர்ச்சையில் சிக்கியது ரஷ்யா!

ரஷ்யாவின் பிரதான எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனையில் சோவியத் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நோவிச்சோக் (Novichok) நச்சுப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் ஒரு சிறப்பு இராணுவ ஆய்வகம் நடத்திய சோதனையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ஜேர்மனி அதிபர் அங்கேலா மேர்கலின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இரசாயனத் தாக்குதலுக்கு அலெக்ஸி நவல்னி அகப்பட்டது திகைப்பூட்டும் நிகழ்வு என சீபர்ட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலை ஜேர்மன் அரசாங்கம் மிகக் கடுமையாக கண்டித்துள்ளதுடன் இதுகுறித்து உடனடியாக தெளிவுபடுத்துமாறு ரஷ்ய அரசாங்கத்தை கோரியுள்ளது.

இதேவைளை, ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஜேர்மனிய கண்டுபிடிப்பு குறித்து ரஷ்யாவிற்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அத்தகைய தரவு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...