Main Menu

யாழில் கடற்படையினரின் வாகனத்துடன் மோதுண்ட மாணவன்- உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் கடற்படையினரின் தண்ணீர் தாங்கி வாகனத்துடன் மாணவன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என விபத்துக்குள்ளான மாணவனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த 24ஆம் திகதி நண்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் ந.கவிப்பிரியன் (வயது 15) எனும் மாணவன் படுகாயமடைந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த மாணவன், யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்துச் சம்பவத்தை அடுத்து மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும், கடற்படையினரின் தண்ணீர் தாங்கி வாகனத்தின் சாரதியான கடற்படையைச் சேர்ந்தவரைக் கைதுசெய்யவில்லை எனவும் அவர்களின் வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லவில்லை என்றும் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லையெனவும் மாணவனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பகிரவும்...