Main Menu

மோடி அரசுக்கு மக்களின் வேதனையை உணரும் இதயம் இருக்க வேண்டும் -ராகுல் காந்தி விமர்சனம்

பெட்ரோல், டீசல் மீதான வரி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை மிரட்டி பணம் பறிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி விலைவாசி உயர்வு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இது தீபாவளி பண்டிகை காலம். பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளன. விமர்சனம் செய்வதற்காக இதை கூறவில்லை. மோடி அரசுக்கு பொதுமக்களின் வேதனையை உணரும் இதயம் இருக்க வேண்டும்’ என கூறி உள்ளார்.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பெட்ரோல், டீசல் மீதான வரி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை மிரட்டி பணம் பறிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.

பகிரவும்...