Main Menu

மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம்

பாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடைபெற்றது.

மேற்படி இரண்டு நாள் அமர்வுகளும் பன்னாட்டு தமிழ் ஆர்வலர்களின் கருத்துரை மற்றும் சங்ககால இலக்கியம் ,விபுலானந்த அடிகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை படித்தல் போன்ற இனிய நிகழ்வுகளுடன் மிகவும் சிறப்பான முறையில், நடந்தேறியது. அத்துடன் எமது கலாச்சாரம் சார்ந்த பல்கலை நிகழ்வுகளும்  இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இந்த நிகழ்வில் பல பல்துறை கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டார்கள்.

பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகை தந்த , வேற்று மொழியை தாய்மொழியாக கொண்ட, நற்றமிழ் விரும்பிகள், ஆர்வலர்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தமை மேலும் இவ் ஆய்வியல் மாநாட்டிற்கு பெருமை சேர்த்தது எனலாம்.

இம் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டை பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.தாய்தமிழுக்கான இத்தகைய போற்றுதலுக்குரிய பெரும்பணியை  முன்னின்று நடாத்திய பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் மேலும் இவ்வாறான பல ஆய்வியல் மாநாடுகளை நடாத்தி செந்தமிழின் செழுமையை, பைந்தமிழின் பன்முகத்தை, பலருக்கும் பறை சாற்றி செவ்வனே செயலாற்ற எமது தமிழ் ஒலி வானொலி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.



 

 

பகிரவும்...