Main Menu

மும்மொழி கல்வியை கற்கக் கூடிய பாடசாலையை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

மினுவாங்கடெ பிரதேசத்தில் மும்மொழி கல்வியை கற்கக் கூடிய பாடசாலையை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

மினுவாங்கொடை தன்சலவத்தை என்ற காணியில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பாடசாலையொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கம்பஹாவை அண்டிய பிரதேசத்தில் வாழும் பிள்ளைகளுக்காக தரமான கல்விக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக பாடசாலை அமைக்கப்பட உள்ளது. 

உத்தேச பாடசாலை தரம் 1இற்கு அமைவாக 6 வகுப்புகளை கொண்டதாக மும்மொழி கல்வியை கற்கக் கூடிய பாடசாலையாக அமைப்பதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பகிரவும்...