Main Menu

மும்பையில் நிலநடுக்கம் : கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!

மும்பையில் இன்று (திங்கட்கிழமை) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரின் வடக்குப் பகுதியில்  102 கிமீ தொலைவில் 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இது 3.5 ரிக்டர் அளவுக் கோலில் பதிவாகியிருந்ததாகவும், நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் குறிப்பிட்டுள்ளது.  நிலநடுக்கம் காரணமாக கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டதுடன்,  இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...