Main Menu

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய் (30/11/2020)

தாயகத்தில் ஆவரங்காலை சேர்ந்த பெல்ஜியத்தில் வசிக்கும் ஜனுஷங்கர் நிருத்திகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஜய் தனது முதலாவது பிறந்தநாளை 30ம் திகதி நவம்பர் மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அஜய் செல்லத்தை அன்பு அப்பா, அம்மா, தாயகத்தில் வசிக்கும் அன்பு பூட்டிமார் தங்கரத்தினம், நாகரத்தினம், புஷ்பராணி பெல்ஜியத்தில் வசிக்கும் சித்தப்பா, சித்தி, ஜனுராஜ் கௌசல்யா குடும்பம், அத்தை ஜனுஸ்கா மற்றும் பெல்ஜியத்தில் வசிக்கும் சித்தப்பா, சித்தி குகேந்திரன் சுதா குடும்பம், குவைத்தில் வசிக்கும் நித்தன் சித்தப்பா, சுவிஸில் வசிக்கும் மாமா, மாமி மோகன் வதனி குடும்பம், சுவிஸில் வசிக்கும் சித்தப்பா, சித்தி லிங்கம் ஜெயா குடும்பம், சுவிஸில் வசிக்கும் மாமா,மாமி தசரதன் ஜீவா குடும்பம், மற்றும் அபிராம், ஜெரூன், நிலோஜன், அனோஜன், ஆரணியா, ஆர்த்திகா, அபர்ணா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஆவரங்கால் சிவன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அஜய் செல்லத்தை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் சகல வளங்களும் பெற்று பல்கலையும் கற்று சிறப்போடு வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் இன்று தனது 1வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அஜய் செல்லத்தின் அப்பப்பா அப்பம்மா பாஸ்கரன் பிறேமா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

கோர்த்தெடுத்த முத்தோனோ
கோபுரத்தின் கலசோனோ
நாத்திசையின் காவலனோ
நாவிதழின் பாவலனோ

இயல் இசையின் நாயகனோ
பல்கலையின் வல்லவனோ
அழகொளிரும் மன்மதனோ
ஆல்இலையின் தூயவனோ

அதிகாலைக் கதிரோனோ
ஆழ்கடலின் மாயவனோ
பூர்வீகத் தமிழோனோ
பூப் பந்தின் புகழோனோ

நேர்த்திசையின் நேர்த்தியனோ
நேர்மை வழி நேர்மையனோ
கண்ணியத்தின் காவலனோ
கார்த்திகையில் பிறந்து வந்த காவியனோ

சுந்தரத்தமிழின் சுபீட்சனோ
சுபீட்சத்தின் விருட்சனோ
புலம்பெயர் மண் பிறந்த மகோட்சனோ
எத்திக்கும் புகழ் பரப்பும் எம்மவனோ

வம்சத்தின் வழிவந்த வாழ்வியனோ
பேரனாய் நாம் கண்ட பெருமகனோ
பேரன்பில் வளர்ந்தெழும் குலமகனோ
வாழப் பிறந்துவந்த வம்சனே வளர்ந்தெழு

சாலச் சிறந்த கல்வியால் மகிழ்ந்தெழு
காலத்தை கணக்கெடுத்து நடந்தெழு
ஊர் உலகம் உன்னை போற்ற
வளர்ந்தெழு
உனக்கானது எதிர்காலம் சிறந்தெழு

பூமியில் கால்பதித்த புதியவனே
பூவுலகம் உனை வாழ்த்த தொடந்தெழு
வாழ்த்துக்கள் உன் வளர்ச்சிக்கு
வாழ்த்துக்கள் உன் எதிர் கால மகிழ்ச்சிக்கு

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களோடு
பேரன் பேத்தி பாஸ்கரன் பிறேமா.
தம்பதியினர்.

பகிரவும்...