Main Menu

முதலாவது கொவிட் தொற்றலையினால் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் ஆறு மில்லியன் பேர் வேலை இழப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் முதல் அலை ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் ஆறு மில்லியன் வேலைகளை அழித்துவிட்டதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

யூரோஃபவுண்ட் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, தற்காலிக ஒப்பந்தக்காரர்கள், இளம் மற்றும் பெண் தொழிலாளர்கள், 2008-09 நிதி நெருக்கடியை விட சில நேரங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

27 நாடுகளின் தொகுதியில் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை கண்காணிக்கவும் மேம்படுத்தவும் அர்ப்பணிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நிறுவனமான யூரோஃபவுண்ட், தற்காலிக ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

இதில், ஸ்பெயின், பிரான்ஸ், போலந்து, இத்தாலி மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

2020 வசந்த காலத்திற்கு முந்தைய 12 மாதங்களில், ஐரோப்பிய ஒன்றிய வேலைவாய்ப்பு 2.4 சதவீதமாக குறைந்துள்ளது.

2008ஆம் ஆண்டில் தொடங்கிய நிதி நெருக்கடியின் காலத்தை விட, தொற்றுநோய்களில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு நிலைகள் சுருங்கிவிட்டன.

2019ஆம் ஆண்டின் இறுதியில் இருந்ததை விட 2020ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 5.7 மில்லியன் குறைவான மக்கள் வேலைவாய்ப்பில் இருந்தனர். மேலும் கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போக்கு வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 6.3 மில்லியன் குறைவு.

10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியைப் போலல்லாமல், தங்குமிடம், உணவு மற்றும் பயணம் உள்ளிட்ட பெண் ஆதிக்கம் செலுத்தும் துறைகளை தொற்றுநோய் பாதித்துள்ளது.

பகிரவும்...