Main Menu

மியான்மார் ஆட்சி கவிழ்ப்பு: எல்லையைத் தாண்டிய அதிகாரிகளை ஒப்படைக்க கோரிக்கை

உத்தரவுகளை நிறைவேற்ற மறுத்ததையடுத்து அடைக்கலம் தேடி எல்லை தாண்டிய பல பொலிஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்புமாறு அண்டை நாடான இந்தியாவை மியான்மார் கேட்டுள்ளது.

அண்மைய நாட்களில் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் எல்லை தாண்டியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடிதம் ஒன்றினை இந்தியாவிற்கு அனுப்பியுள்ள மியன்மார், நட்பு உறவுகளை நிலைநாட்ட அவர்களை திருப்பி அனுப்புமாறு கோரியுள்ளது.

கடந்த மாதம் நடந்த இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து மியான்மார் முழுவதும் மக்கள் ஆடப்பட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதுவரை குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

இராணுவத்தை மீறிய போராட்டங்களுக்கு முன்னதாக சனிக்கிழமை மிகப்பெரிய நகரமான யாங்கோனில் பொலிஸார் ஒரே இரவில் சோதனைகளை மேற்கொண்டனர்.

கைது செய்ய சென்றபோது பாதுகாப்புப் படையினர் கட்டிடங்களை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...