Main Menu

மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ்-அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுவை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா பங்கேற்று ஊக்கத்தொகை ஆணை வழங்கினர். விழாவில் அமைச்ச்ர நமச்சிவாயம் பேசியதாவது:- மத்திய அரசின் தூய்மை பள்ளி விருது புதுவையை சேர்ந்த 6 பள்ளிகளுக்கு கிடைத்துள்ளது. இதில் 5 அரசு பள்ளிகள். புதுவை அரசு கல்வித்துறைக்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சீருடை வழங்க டெண்டர் கோரப்பட்டு பணிகள் முடிந்துள்ளது. விரைவில் சீருடை வழங்கப்படும். இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பஸ்சை இலவசமாக இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 36 பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 39 பஸ்கள் சரி செய்யப்பட்டு விரைவில்இயக்கப்படும். புதுவையில் அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும். ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க காலி பணியிடம் நிரப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...