Main Menu

மலை­யக மக்­களின் உணர்­வு­க­ளோடு எவரும் விளை­யாட வேண்டாம்: அனுஷா சந்­தி­ர­சே­கரன்

”குப்பி லாம்பின் வெளிச்­சத்தில் படித்து பட்டம் பெற்ற பட்­ட­தா­ரி­க­ளையும் குடும்ப கஷ்­டத்­திற்­காக குடும்ப சுமையை தன்­மீது சுமத்­திக்­கொண்டு படித்த மேதை­க­ளையும் கொண்­டது எங்கள் மலை­யக மண். எனவே, எவரும் எமது உணர்­வு­க­ளோடு விளை­யாட வேண்டாம்” என மலை­யக மக்கள் முன்­ன­ணியின் பிரதி பொதுச்­செ­ய­லாளர் அனுஷா சந்­தி­ர­சே­கரன் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,

எம் சமூ­கத்தை விமர்­சிக்க எத்­த­னிப்­ப­வர்­க­ளுக்கு ஒன்று மட்டும் தெளி­வாக கூறிக் கொள்ள விரும்­பு­கிறேன். யாரோ ஒரு­வரின் வாய் வார்த்­தையை பெரி­தாக்கி அதில் அர­சியல் செய்யும் நோக்­கத்­தோடு இதை நான் தெரி­விக்­க­வில்லை.

மலை­ய­கத்தில் பிறந்த பெண்­ணாக ஒரு சட்­டத்­த­ர­ணி­யாக ஏனைய அனைத்து சமூ­கத்­தையும் மதிக்கும் பிர­ஜை­யாக ஒரு பணிவான வேண்­டு­கோ­ளாக இதனை பகிர்­கிறேன். வேண்­டு­கோளை ஏற்­கா­விட்டால் எச்­ச­ரிக்கையாக இருக்கட்டும்.

நாங்கள் மலை­யக சமூ­க­மாக கல்வி, விளை­யாட்டு, கலா­சார துறை மட்­டு­மன்றி இதர பல துறை­க­ளிலும் பிற சமூ­கத்­தி­ன­ருக்கு நிக­ரா­கவே வளர்ச்­சி­ய­டைந்­துள்ளோம்.

அதே போன்று ஒரு அறையில் குப்பி லாம்பின் வெளிச்­சத்தில் படித்து பட்டம் பெற்ற பட்­ட­தா­ரி­க­ளையும் குடும்ப கஷ்­டத்­திற்­காக குடும்ப சுமையை தன்­மீது சுமத்­திக்­கொண்டு படித்த மேதை­க­ளையும் கொண்­டது எங்கள் மலை­யக மண்.

வீணாக எங்­களின் வளர்ச்­சியை பற்றி தெரி­யாமல் அறி­யாமல் விமர்­சிக்க வேண்டாம். குட்ட குட்ட குனி­ப­வர்கள் அல்ல நாங்கள், இனி­யா­யினும் பொது­வெ­ளியில், சமூக வலைத்­த­ளங்­களில், ஊட­கங்­களில் எம் சமூகம் சார்ந்த வார்த்தை பிர­யோ­கங்­களை கவ­ன­மாக கையா­ளவும், அண்மையில் பேராசிரியர் ஒருவர் மலையக மக்கள் தொடர்பாக கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அனுஷா, ஒரு பேரா­சி­ரியர் என்ற ரீதியில் தங்­களின் மீது கல்­வி­யி­ய­லா­ள­ராக நன்­ம­திப்­புள்­ளது. அதற்­காக நீங்கள் பிற சமூகம் தொடர்­பாக தெரி­விக்கும் கருத்­துக்கள் யாவும் சரி என்­றா­கி­வி­டாது.

உயர்­தரம் வரைக்கும் மட்­டுமே படித்து பட்­ட­தா­ரி­யில்­லாத போதும் கல்­வியின் சமூக வளர்ச்­சிக்­காக பாடு­பட்ட எம் வீர தலைவர் சந்­தி­ர­சே­க­ரனின் புதல்­வி­யா­கவும் அதே மலை­யக மண்ணின் பட்­ட­தா­ரி­யா­கவும் சட்­டத்­த­ர­ணி­யா­கவும் கூறு­கிறேன், எங்கள் உணர்­வு­க­ளோடு விளை­யாட வேண்டாம்.இளை­ஞர்­களே, நண்பர்களே, சகோதர சகோதரிகளே இவரை போன்றவர்களை விமர்சிப்பதில் காலத்தை கடத்தாமல் எமது அடுத்த கட்டத்தை பற்றி சிந்திப்போம்! மலையகம் எமது தாயகம் நாம் ஒரு தேசியம் என்பதை உரத்துச்சொல்லுவோம் எனவும்  என்று தெரிவித்துள்ளார்.

பகிரவும்...