முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையானார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான முறைப்பாட்டின் விசாரணை முன்னேற்றங்களை இன்று (08) நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவித்திருந்தது.
அதற்கு அமையவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இவ்வாறு வருகை தந்துள்ளார்.
