Main Menu

மஞ்சள் மேலங்கி போராட்டம் – பாதுகாப்பு அதிகரிப்பு

மஞ்சள் மேலங்கி போராளிகள் இன்று 45 ஆவது வாரம் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 முந்தைய வாரங்களை விட இன்று அதிகமான போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் பரிசுக்குள் மாத்திரம் 7,500 காவல்துறையினர் மற்றும் ஜோந்தாமினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சோம்ப்ஸ்-எலிசேயில் காலை 10:00 மணிக்கி « La France en colère » அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவ் அமைப்பின் நிர்வாக இயக்குனர்  Eric Drouet அறிவித்துள்ளார். நேற்று மாலை வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட 11,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

காலை 9 மணிக்கு 8 ஆம் வட்டாரத்தின் Place de la Madeleine இல் ஒரு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.  16 ஆம் வட்டாரத்தின் Edmond-Rostand பகுதியில் 14:30 மணியில் இருந்து மற்றுமொரு குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது. இங்கிருந்து பேரணி ஆரம்பித்து Luxembourg Gardens வரை ஆர்ப்பாட்டக்குழு செல்ல உள்ளது.  

13:30 மணிக்கு 7 ஆம் வட்டாரத்தின் parade Duroc பகுதியில் இருந்து 14 ஆம் வட்டாரத்தின் Denfert-Rochereau வரை மற்றுமொரு குழு பேரணியில் ஈடுபட உள்ளது.  கிட்டத்தட்ட பரிஸ் முழுவதும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதால் வீதிகள் முடக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட உள்ளது.

பகிரவும்...