Main Menu

விரைவில் ட்ரம்பிற்கும் இம்ரான் கானிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

74-வது ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின்போதே அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, நேரில் சந்தித்து பேசுகிறார்.

இதன்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிரவும்...