Main Menu

மக்ரோன் மற்றும் மரீன் லு பென் நேரடி விவாதம்

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி வேட்பாளர்களான இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லு பென் ஆகிய இருவரும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர்.

மிக குறுகிய நேரத்தில் இருவரும் தங்களின் வாக்குறுதிகளையும், நிலைப்பாடுகளையும் தெரிவித்தனர்.
**
எரிபொருள் விலையேற்றம்! – சலுகைகள்!!

முதலாவதாக எரிபொருட்களின் விலை மற்றும் பொதுமக்களுக்கான சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ‘நீங்கள் வரிகளை அதிகரித்துள்ளீர்கள். பின்னர் சலுகைகள் வழங்குவது கண்துடைப்பு!’ என மக்ரோனை குற்றம் சாட்டினார்.

இரஷ்யா!

பின்னர், இரஷ்யா நிலைப்பாடு குறித்து இருவரும் விவாதித்தனர். மரீன் லு பென் இரஷ்யாவுக்கு ஆதரவாகவும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராகவும் செயற்படுவதாகவும் மக்ரோன் குற்றம் சுமத்தினார்.

பிரான்ஸ் – ஐரோப்பா..!

‘பிரான்சுக்கு என தனியே ஒரு அடையாளம் இல்லாமல்- அதை ஐரோப்பாவாக மாற்ற நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்!’ என மரீன் லு பென் மக்ரோனிடம் குறிப்பிட்டார்.

‘பிரான்சுக்கு என உள்ள இறையான்மையை நீங்கள் ஐரோப்பாவின் இறையான்மையாக மாற்ற முயற்சி செய்கிறீர்கள். ஐரோப்பிய கொடியை முன்னிலைப்படுத்தியுள்ளீர்கள்!’ என மரீன் லு பென் குற்றம் சுமத்தினார்.

சுற்றுச்சுழல் – விவசாயம்!

பின்னர் இருவரும் சுற்றுச்சூழல் மறேஉம் விவசாயம் தொடர்பாக விவாதித்தனர். இதில் ஒருவரை ஒருவர் மாறிமாறி கடிந்துகொண்டனர். மக்ரோனிடம் ‘நீங்கள் சுற்றுச்சூழல் தொடர்பாகவும், விவசாயிகள் குறித்தும் எந்த பிரெக்ஞையும் இல்லாமல் உள்ளீர்கள்!’ என மரீன் லு பென் தெரிவித்தார்.

பாதுகாப்பு – குடியேற்றம்!

பின்னர் நாட்டின் பாதுகாப்பும், குடியேற்றம் தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர். ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர்.

‘அரசாங்கத்தால் காவல்துறையினர் அவமதிப்புக்குள்ளாகிறனர். அவர்களுக்கு மறுசீரமைப்பு வழங்கவேண்டும்!’ என மரீன் லு பென் தெரிவிக்க,

இம்மானுவல் மக்ரோன், இஸ்லாமிய கலாச்சார உடை தொடர்பான மரீன் லு பென்னின் நிலைப்பாட்டை விமர்சித்தார். ‘பொது இடங்களில் இஸ்லாமிய கலாச்சார உடையினை தடை செய்வதென்பது ஒரு சிவில் யுத்தத்தை ஏற்படுத்தும்’ என மக்ரோன் விளாசினார்.

***

விவாதத்தின் முடிவில் ‘நாம் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரை விட தற்போது இன்னும் அதிகமான ஒழுக்கத்துடன் நடந்துகொள்கிறோம். இனிமையாக உள்ளது!’ என மரீன் லு பென் தெரிவித்தார்.

அதற்கு, ‘ ஏனென்றால் எமக்கு வயதும் அனுபவமும் அதிகரித்துள்ளது!’ என சிரித்துக்கொண்டு பதிலளித்தார்.

முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றுக்கு முன்னரும் இருவரும் இதேபோன்ற நேரடி விவாதத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...