Main Menu

மக்ரோன் – மரீன் லு பென் விவாதம்! – பார்வையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

நேற்று இரவு இடம்பெற்ற இரு ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாத நிகழ்ச்சியை குறைவான அளவு மக்களே பார்வையிட்டுள்ளனர்.

TF1 மற்றும் France 2 தொலைக்காட்சிகளூடாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த நேரடி விவாதத்தை 15.6 மில்லியன் பேர் நேரடியாக பார்வையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற முறை ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியோடு ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கை ஆகும்.

முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் ‘மக்ரோன்-மரீன் லு பென்’ இருவரும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இரண்டாம் சுற்று வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற நேரடி விவாதத்தினை 16.5 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர்.
 

பகிரவும்...