Main Menu

மகாவம்சத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற கருத்துக்கு டயனா கமகே கடும் எதிர்ப்பு

மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அன்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்க்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது, மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றதொரு கருத்தை அவர் கூறியிருந்தார்.

அத்தோடு, வடக்குக் கிழக்கில் பௌத்தர்கள் இல்லாத காரணத்தினால், புத்தர் சிலைகளை நிறுவி வழிப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவரது இவ்வாறான கருத்தை நாம் கவணத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.

ஏனெனில், மகாவம்சத்தை பௌத்தர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதனை உலகமே அங்கிகரித்துள்ளது. அத்தோடு, இது பௌத்த நாடு என்ற வகையில், புத்தர் சிலைகளை இலங்கையின் எந்த பாகத்தில் வைக்கவும், விகாரைகளை அமைக்கவும் எமக்கு உரிமையுள்ளது.

இது எமக்கான மத உரிமையாகும். பௌத்தத்திற்கு மட்டுமல்லாமல் ஏனைய மதங்களுக்கும் இதே உரிமை உள்ளது” என கூறினார்.

பகிரவும்...