Main Menu

தீர்வு விடயத்தில் இந்தியாவை அணுகுவதை போலவே மீனவர் பிரச்சினைக்கும் அவர்களிடம் செல்லுங்கள் – சபையில் வாசுதேவ

வடக்கிற்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இந்திய மீனவர்களின் அத்து மீறல் விவகாரம் தொடர்பாகவும் இந்திய அரசை அணுகுமாறு வாசுதேவ நாணயக்கார கடும் தொனியில் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உற்பத்தி வரி (சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன மீதான விவாத்தில் உரையாற்றிய சார்ல்ஸ் நிர்மலநாதன் வடக்கின் மீனவர் பிரச்சினை குறித்து பேசினார்.

வடக்கு கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என்றும் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் முறையிட்ட வேளையில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர வாக்குறுதியளித்தார்.

எனினும் சபையில் இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வடக்குக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இதனையும் அவர்களிடமே சென்று தீர்வு காணுங்கள் என கடும் தொனியில் கூறினார்.

இதற்கு பதில் தெரிவித்த சார்ல்ஸ் நிர்மலநாதன் “நீங்கள் எமது மக்களுக்கு தரவேண்டியதை தராது போனால் நாம் அவர்களிடம் தானே கேட்டாக வேண்டும்” என பதில் வழங்கினார்.

பகிரவும்...