Main Menu

போலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி முன்னிலை: 2ஆவது கட்ட வாக்கெடுப்பில் தீர்மானம்

போலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.

ஆனால் இதுவரை பதிவு செய்யப்பட்ட முடிவுகளின்படி, இரண்டாவது சுற்று வாக்களிப்பு இல்லாமல் அவர் வெல்ல வேண்டிய 50 சதவீத வாக்குகளை அவரால் பெறமுடியாமல் போயுள்ளது.

இதனால், போலந்தின் ஆளும் சட்டம் மற்றும் நீதி (பிஐஎஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் டுடா, மொத்த வாக்குச் சாவடி மாவட்டங்களின் எண்ணிக்கையில் 82.2 சதவீத அடிப்படையிலான முடிவுகளின்படி, 45.73 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வார்சாவின் லிபரல் மேயரான ரஃபாஸ் ட்ராஸ்கோவ்ஸ்கிக்கு 28.51 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முதல் கட்டத் தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் கிடைக்காவிட்டால், இரண்டாம் கட்டமாகத் தேர்தல் நடைபெறும்.

இதன்படி, ஜூலை 12ஆம் திகதி போலந்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இரண்டாவது வாக்கெடுப்பில், இவ் இருவரும் போட்டியிடவுள்ளனர்.

போலந்தின் ஜனாதிபதித் தேர்தலில் வெளியேறும் கருத்துக் கணிப்புகள், தற்போதைய ஆண்ட்ரெஜ் டுடா முதல் இடத்தைப் பிடித்திருப்பதாகக் கூறுகிறது,

கொரோனா வைரஸ் மற்றும் சமூக தொலைதூர கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது.

பகிரவும்...