Main Menu

போர்த்துகல் ஜனாதிபதியாக மார்செலோ ரெபெலோ டி சௌசா மீண்டும் தேர்வு!

பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியும் மைய வலதுசாரியுமான மார்செலோ ரெபெலோ டி சௌசா மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் மீண்டும் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா, டிசோசா 61.5 சதவீத வாக்குகளை பெற்று தேர்தல் வெற்றிபெற்றார். இதன்மூலம் 5 ஆண்டு காலத்திற்கு அவர் சேவை செய்வார்.

சோசலிச வேட்பாளர் அனா கோம்ஸ் 13 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தில் ஆண்ட்ரே வென்ச்சுரா 12 சதவீத வாக்குகளை பெற்றார்.

கொரோனா காலமென்பதால் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக வழக்கத்தைவிட அதிகப்படியான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் கட்டாய முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆனாலும் சமீபத்திய தேர்தல்களில் இல்லாத வகையில் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.

பகிரவும்...