Day: January 27, 2021
ஐரோப்பாவில் தடுப்பூசி வழங்களில் தாமதம் – ஐரோப்பிய ஒன்றியத்தை சாடும் அஸ்ட்ரா ஜெனெகா தலைவர்
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தலைவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தாலியில் இடம்பெற்ற செய்தியாளர் தந்திப்பில் பேசிய அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தலைவர், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க பிரித்தானியாவே முதலில்மேலும் படிக்க...
வடகொரியா தூதர் தென் கொரியாவுக்கு தப்பியோட்டம்
குவைத் நாட்டுக்கான வடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்த ரியூ ஹியூன் வூ தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவிமேலும் படிக்க...
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டி உள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது: எம்ஜிஆர் மறைவுக்குமேலும் படிக்க...
எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வர் அல்ல – பிரேமலதா விஜயகாந்த்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. அதிமுக கட்சி சார்பாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் தேமுதிக பிரமுகர்களின் இல்லப் புதுமனை புகுவிழா, காதணி விழா, மருத்துவமனை திறப்புமேலும் படிக்க...
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு திறக்க தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ளமேலும் படிக்க...
குருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்!
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வு பணிகள் இடம்பெறும் இடத்துக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சார்ள்ஸ்மேலும் படிக்க...
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த யாழ் மாநகரசபையை வி.மணிவண்ணன்மேலும் படிக்க...
60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.ஜோசெப் அன்ரனி ஜோர்ஜ் (Joseph Antony George) அவர்கள் (27/01/2021)
தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசிக்கும் திரு. ஜோசெப் அன்ரனி ஜோர்ஜ் (Joseph Antony George) அவர்கள் இன்று தனது 60வது பிறந்தநாளை 27ம் திகதி ஜனவரி மாதம் புதன் கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 60வதுமேலும் படிக்க...
பிரான்சில் தயாரிக்கப்பட உள்ள அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசி
பிரான்சின் மருந்துத் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான Sanofi நிறுவனம், பிரான்சில் தற்போது பயன்படுத்தப்படும் அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசியான Pfizer – BioNTech இனைத் தயாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பா முழுவதிற்குமான Pfizer – BioNTech கொரோனத் தடுப்புமேலும் படிக்க...
நான்கு ஆண்டுகளுக்கு மூடப்படும் அருங்காட்சியகம்
பரிசின் மிக பிரபலமான Centre Pompidou அருங்காட்சியகம் நான்கு ஆண்டுகள் மூடப்பட உள்ளன. திருத்தப்பணிகள் காரணமாக இந்த காட்சியகம் மூடப்பட உள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்து 2027 ஆம் ஆண்டுவரையான நான்கு ஆண்டுகள் திருத்தப்பணிகள் இடம்பெற உள்ளதாகவும், இந்த நான்குமேலும் படிக்க...
போர்த்துகல் ஜனாதிபதியாக மார்செலோ ரெபெலோ டி சௌசா மீண்டும் தேர்வு!
பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியும் மைய வலதுசாரியுமான மார்செலோ ரெபெலோ டி சௌசா மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மீண்டும்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் வேலையின்மை வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 4.9 சதவீதமாக இருந்தது. இதன்படி, 1.72 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருப்பதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதேமேலும் படிக்க...
பிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்தனர். பரானா மாகாணத்தில் 53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்து, திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம்மேலும் படிக்க...
கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், ‘கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதைமேலும் படிக்க...
தண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைமேலும் படிக்க...
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின்
‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2016 டிசம்பர் 5ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததாகமேலும் படிக்க...
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டமேலும் படிக்க...