Main Menu

பிரித்தானியாவின் வேலையின்மை வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 4.9 சதவீதமாக இருந்தது.

இதன்படி, 1.72 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருப்பதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 418,000 அதிகமாகும். முந்தைய மூன்று மாதங்களை விட 202,000 அதிகரித்துள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் 2015ஆம் ஆண்டு வரை வேலையின்மை மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என்று தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, டிசம்பர் 2009ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்கள் வரை வேலையின்மைக்கான மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பு இதுவாகும்.

பகிரவும்...