Main Menu

போதைப்பொருள் இறப்புகள் எண்ணிக்கையில் ஸ்கொட்லாந்து முதலிடம்!

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1187 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 27 சதவிகிதம் அதிகமாகும். அத்துடன் இது 1996 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் போதைப்பொருள் இறப்பு விகிதம் வேறு எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டை விடவும் அதிகமாக உள்ளதாக இந்த புள்ளிவிவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் அதிகரிப்பு 35 முதல் 44 வயது மற்றும் 45 முதல் 54 வயதுக்குட்பட்டவர்களில் காணப்பட்டதாகவும் இறந்தவர்களில் 72% ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடு அவசரநிலையை எதிர்கொள்கிறது எனவும் போதைப்பொருள் பாவனை காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது எனவும் ஸ்கொட்டிஷ் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை ஸ்கொட்டிஷ் அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

பகிரவும்...