Main Menu

போட்டியிலிருந்து விலகப் போவதுமில்லை ஏனையோருடன் இணையப் போதுமில்லை – மகேஷ் சேனாநாயக்க

ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை என்று அறிவித்துள்ள தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார் முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க வேறெந்த தரப்புக்களுடன் இணைவதற்குரிய பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அடுத்து வரும் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள மகேஷ் சேனாநாயக்க மற்றும் ரொஹான் பல்லேவத்த ஆகியோர் தம்முடன் இணைத்துகொள்ளவுள்ளதாகவும் அதற்குரிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி மகேஷ் சேனநாயக்கவின் ஊடகப்பேச்சாளர் கமல் அபேசிங்க தெரிவிக்கையில்,

அண்மைய தினங்களில் தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க போட்டியிலிருந்து விலகப்போவதாகவும், பிறிதொரு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் தகவல்கள் பிரசாரம் செய்யப்படுகின்றன. ஆவற்றை நாம் முற்றாக நிகராரிக்கின்றோம்.

இந்த நாட்டில் 71 ஆண்டுகளாக நீடிக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் புதிய அரசியல் கலாசாரத்தினை அறிமுகப்படுத்தி நாட்டை அபிவிருத்தியுடன் கூடிய வளமான பதையில் இட்டுச்செல்வவதற்குமாகவே மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இவ்வாறான நிலையில் தெளிவான சிந்தனையும் இலக்கினையும் உடைய ஒருவரின் அரசியல் செயற்பாடுகளை தடுக்கும் முனைப்பிலேயே தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  எந்தவொரு சந்தர்ப்பதிலும் போட்டியிலிருந்து விலகுவதற்கான தீர்மானங்களை எடுக்கவில்லை என்பதை உறுதியாக தெரிவிப்பதோடு மக்கள் அனைவரும் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

பகிரவும்...