Main Menu

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்குகின்றது பெல்ஜியம்!

கடைகள் மற்றும் சினிமாக்கள் போன்ற பொது இடங்களில், முகக்கவசம் அணிவதை பெல்ஜியம் அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது.

இன்று (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியை பின்பற்றத் தவறுபவர்களுக்கு 250 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படுகின்றது.

மேலும், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் போன்ற இடங்களும் இதில் அடங்கும்.

பல்பொருள் அங்காடிகளில் வாடிக்கையாளர்களை நுழைவாயில்களில் நிறுத்தும் ஊழியர்கள், முகக்கவசம் அணிவதை நினைவூட்டுகின்றனர்.

அத்துடன் முகக்கவசம் மற்றும் கையுறைகளை இலவசமாகவும் வழங்குகின்றன.

ஏற்கனவே பெல்ஜியத்தில் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிய வேண்டும் அல்லது ஒரு வேலையில் பணிபுரியும் போது, வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சிகையலங்கார நிபுணர் போன்றவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

அரசாங்கம் வரையறுத்துள்ள இந்த விதிகளை பின்பற்றத் தவறும் வணிகங்களுக்கு 750 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

இதனை மீண்டும் செய்யும் குற்றவாளிகளுக்கு 4,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் சில சந்தர்ப்பங்களில் எட்டு நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.

பகிரவும்...