Main Menu

பெங்களூர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப் படுகிறார் சசிகலா- மருத்துவமனை அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து, பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, நாளை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மூன்று நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதால், அவர் விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தலை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், மருத்துவமனையில் இருந்து நாளை வெளியேறவுள்ள சசிகலா, பெங்களூரில் பண்ணை வீடு ஒன்றில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த  சசிகலா, தண்டனைக் காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான சிகிச்சையை முடித்துள்ள அவர், எதிர்வரும் பெப்ரவரி மூன்று அல்லது ஐந்தாம் திகதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சசிகலா தமிழக எல்லைக்குள் நுழையும் பிரமாண்ட வரவேற்பளிக்க அ.ம.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.

பகிரவும்...